உடல் வலியிலேயே மிகவும் சிரமத்தை தரக்கூடிய ஒன்று கழுத்து மற்றும் முதுகு வலி. சரியான பராமரிப்பால் இதைத் தவிர்க்கலாம்!

நீண்ட நேரம் ஒரு இடத்தில் தவறான முறையில் அமர்ந்து வேலை செய்வது தசை வலியும் தசை நார்களில் அழுத்தத்தையும் உண்டாக்கு

திடீர் அசைவுகள், கூலி வேலைகள், அல்லது உடற்பயிற்சியில் காயம் ஏற்படும் போது தசைநார்களில் சுளுக்கு ஏற்படும்.

வயது அதிகரிக்கும் போது டிஸ்க் தேய்மை, கீல்வாதம் போன்றவை முதுகு வலியை ஏற்படுத்தும்.

டிஸ்க் பிதுங்கி நரம்புகளை அழுத்தும்போது கடும் வலியும் சியாட்டிகாவும் ஏற்படும்.

அழுத்தம் அதிகரித்தால் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு கழுத்து, முதுகு வலி தோன்றும்.

அதிக உடல் எடை முதுகெலும்பின் அழுத்தத்தை அதிகரித்து வலியை உண்டாக்கும்.

தவறான தலையணை அல்லது மெத்தை பயன்படுத்துவது கழுத்து வலியை ஏற்படுத்தும்.